Happy Birthday DADA

தலைவன் ஒருவனே :-
தாதா கங்குலிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது
ஒரே ஒரு போன்கால் நாளைக்கு மேட்ச்ல நீ இருக்க தோனினு..4 போட்டில அடிக்கல அப்படின்ன உடன் உட்கார வைக்காம..
அவர் கொடுத்த அந்த வாய்ப்ப கெட்டியா
புடிச்சான் தலைவன் அப்ப தெரியல யாருக்கும் இந்திய கிரிக்கெட்ல புதுசா ஒரு அமைதிப்புயல் உள்ள வந்திருக்கு அது இனிமே ஆட போற வேட்டை பெருசுனு..தங்கத்த தகரம்னு சில பேர் நினைச்சானுங்க ஆனா அதுக்கு அடுத்த 2 வருஷத்துல நம்ம தல ஆடுன வெறியாட்டம் பெரிய பெரிய அன்றைய கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆஸி அப்பறம் தென் ஆப்பிரிக்கா,இலங்கை,பாகிஸ்தான் அப்படின்னு எல்லார் வைத்துலயும் புளிய கறச்சது அதாவது பயத்துக்கு பாஷை இல்லையே அப்பறம் 2006ல கொஞ்சம் சறுக்கல் அதாவது 2007 உலககோப்பை இந்தியாவுக்கு பெரிய ஆறாத காயத்த கொடுத்துறுச்சு..அவ்வளவுதான என் தோனினு அழுதப்போ அதே வருஷம் T20 உலககோப்பை அறிமுகமாச்சு அப்போ ஒரு டீமையும் மிச்சம் வைக்காம வேட்டை ஆடி பைனல்ல பாகிஸ்தான ஜெயிச்ச அப்பறம் த்தா என் தலைவனோட அந்த கர்ஜனை சும்மா சிங்கம் மாதிரி எப்படி சும்மா சிங்கம் மாதிரி அதாவது இனிமே இந்தியாவுக்கு நான் இருக்கேன் என்ன தாண்டி தொட்றா பாப்போம்னு ஒரு தோரணை தலைவன் கிட்ட...சந்தோஷத்துல அப்ப அழுக வந்தது இன்னும் நினைவுல இருக்கு..அப்பறம் 2008 சி.பி.சீரியஸ் அப்பறம் 2009 டெஸ்ட் தரவரிசையில் இந்தியா நீண்டநாள் முதலிடம்னு இந்தியா கிரிக்கெட் உச்சத்த நோக்கி போக அப்போ தல பார்ம் வேற லெவல்ல இருந்தது அதாவது 2 வருஷமா ODI சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் அப்படி இருக்கப்போ 2011 உலககோப்பை இந்தியாவுல நடக்க அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இந்தியா மேல சச்சின் கனவு நினைவாகுமானு கேள்விக்குறி வேற.?
லீக் போட்டிக்கள தல தலைமைல இந்தியா அசத்த ஆனால் பேட்டிங்குல அவர் கொஞ்சம் சோப்பிக்க தவற...எல்லா பெரிய டீமையும் தூக்கி அடிச்சு இந்தியா பைனல் போக...அங்க தேவையான நேரத்துல உள்ள வந்து நான் இருக்கேன் இன்னும் களத்துலனு இந்திய ரசிகர்கள்களுக்கு பெரிய நம்பிக்கைய கொடுத்தார் தல அந்த பைனல் மேட்ச யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது...கடைசிய அந்த வின்னிங் சிக்ஸர் அடிச்ச உடன் என் கண்ணுல தண்ணீ நிக்காம வருது பின்ன எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா அதலாம்...சச்சினும் சந்தோஷமாக வழியனுப்பி வச்சாச்சு அதுக்கு அடுத்தும் தல ஆட்டம் நிக்கல 2013 சேம்பியன்ஸ் ட்ராபீ அப்பறம் 3 IPL கப் இப்படி பெரிய லிஸ்ட் ஆனா 2019 உலககோப்பை அந்த ரன் அவுட் என்ன ரொம்ப பாதிச்சுறுச்சு...
ஊருக்கெல்லாம் ராஜமரியாதை கொடுத்து வழியனுப்பி வச்ச என் தலைவனுக்கு இப்போ இருக்க இந்திய அணி அத செய்ய தவறிட்டாங்க..
இருந்தாலும் எங்கையும் எப்பவும் அவர் ராஜாதான்...
உன் சரித்திரம் பேசும் தலைவா
Happy Birthday Our Inspiration
Love You THALA DHONI
HAPPY BIRTHDAY DADA